மேலைக்கோட்டையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 May 2023

மேலைக்கோட்டையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  மேலைக்கோட்டையூர் ஊராட்சியில் ஶ்ரீதேவிகருமாரியம்மன் கோவில் எதிரே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் 69வது பிறந்தநாளையொட்டி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தையூர் ஊராட்சி மன்றத்தலைவர் தையூர் எஸ்.குமரவேல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் அதிமுக செய்தி தொடர்பாளர் எஸ்.கல்யாணசுந்தரம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார், நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைகள், மகளிர்களுக்கு தையல் மிஷன், புடவைகள், வேட்டிகள், இஸ்திரி பெட்டிகள், அரிசி காய்கறிகள்  உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது, மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் கோப்பையும்  வழங்கப்பட்டது. 



மேலும் நிகழ்ச்சியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு  கிழக்கு மாவட்ட செயலாளர் பையனூர் பி.ஆர்.குமார், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து, மாவட்ட துணைச் செயலாளர்  எ.எஸ் வந்த்ரா, மாவட்ட அணி செயலாளர்கள் வி.வேலாயுதம், ஆனூர் வி.பக்தவச்சலம் , பையனூர் ஆர்.கே.குமார், கோவளம் எம்.பாஸ்கர், வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன், குணசேகரன், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி, கங்கை அமரன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குட்டி என்கிற நந்தகுமார், தண்டலம் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஆனந்தன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணிச்செயலாளர் கேளம்பாக்கம் வினோத்கண்ணன், கேளம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத்கண்ணன், கொளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், அம்மா பேரவை வடக்கு ஒன்றிய இணைச்செயலாளர் கொளத்தூர் பி.வாசுதேவன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலாளர் ஜி.முத்து, நிர்வாகிகள் ஆமூர் ஏழுமலை, கணேசன், முட்டுக்காடு முனுசாமி, முட்டுக்காடு பாஸ்கர்,  சிவசங்கர், ராஜலட்சுமி, வசந்த், மேலகோட்டையூர் நிர்வாகிகள் ஏழுமலை, எல்.புஷ்பராஜ், பி.ஏழுமலை  சௌந்தர்ராஜன், கோதண்டராமன், பிரபாகரன், முருகானந்தம், ஜேம்ஸ் பாபு, செந்தில்குமார், சுந்தர்ராஜன், திருமுருகன், இ.குமார், எல்லையன், பி.அம்மாவாசை, விஷ்ணு மற்றும் கட்சியினர்கள் பொதுமக்கள் என3000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad