செங்கல்பட்டு மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு பிறந்த 31 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் எம். கஜா (எ) கஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் கலந்துகொண்டு 31 குழந்தைங்களுக்கு தங்க முகத்திரம் மற்றும் குழந்தைகளுக்கான பவுடர் சோப் உடைகள் அடங்கிய பரிசு பெட்டகம் உள்ளிட்டவை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி செயலாளர் கனிதா சம்பத், மேற்கு ஒன்றிய செயலாளர் சி ஆர். குணசேகரன், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் ஜெகதீஷ், வேங்கடமங்கலம் சுரேஷ், கணேஷ் (எ) கனி, கீழ்ப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment