13 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 June 2023

13 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கம் மற்றும் ஸ்ரீபெருமந்தூரில் இயங்கும் Mobis இந்தியா பவுண்டேஷன் இணைந்து சுமார் 12 மாற்று திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனம் ஊரப்பாக்கத்தில் ஆனந்தவல்லி பள்ளி வளாகத்தில்  வழங்கப்பட்டன.


 மேலும் இந்த நிகழ்ச்சியில் MOBIS India limited யின் சீனியர் ஜெனரல் மேனேஜர் சுப்பிரமணியன், மற்றும் பள்ளி தாளாளர் கனிமொழி, அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் வழங்கினார். முன்னதாக லயன் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். 


இந்த நிகழ்ச்சியில் லயன் சங்கத் தலைவர் பாண்டிய லட்சுமி, செயலாளர் லயன் சாந்தி கார்த்திக், பொருளாளர் தேவிநேரு, லைன் சங்க நிர்வாகிகள் ஜான்சன் பால், கோபால் ராமகிருஷ்ணன், சரவணன், மாணிக்கராஜ், ஞானசேகர், சரவணகுமார், சோமசுந்தரம், சர்வேஸ்வரராவ், சதீஷ், வெங்கடேஷ், சுபாஷினி, சந்திரமோகன், பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad