முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா இலவச மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் என விமர்சையாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 11 July 2023

முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா இலவச மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் என விமர்சையாக கொண்டாடப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் ஜி எஸ் டி சாலை ஒட்டி  முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்ட யாதவ சங்கத் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில்  வீராபுரம் எத்திராஜ், மகேந்திரா சிட்டி ரவி, குமாரபாபு முன்னிலை வகித்தனர்.


பாஜக ரகுராமன் வரவேற்புரை வழங்கினார், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மறைமலைநகர் வண்டலூர் போக்குவரத்து ஆய்வாளர் ஹேமந்த் குமார் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கினார். மேலும் கலந்து கொண்ட கேஆர்சி பஸ் உரிமையாளர் ஜே சதீஷ் அன்னதானம் வழங்கினார், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். 


மேலும் வெளிச்சம் பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் தமிழரசன் இலவச மருத்துவ முகாமையும் அங்கு நடத்தினார், மேலும் இவ்விழாவில் இந்து யாதவா பேரவை தலைவர் சுப்புராமன், நாராயணன் துரைராஜ் ராதாகிருஷ்ணன் சீனு (எ) சிவணேசன் நிகழ்ச்சியின் இறுதியில் தேவனூர் வீரபத்திரன் நன்றியுரை வழங்கினார் இவ்விழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள்  என பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad