உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 June 2023

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு துறை இயக்குநர் Dr.T.அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு கலப்படம் பற்றி செயல்முறை விளக்கங்களை தெளிவாக விளக்கினார்.


வண்டலூர் கிரசன்ட் பல்கலைகழகத்தின் உயிர் அறிவியல் துறையின் உணவு உயிரி தொழில்நுட்பத்துறை முதுநிலை மாணவர்கள் உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு செயல்முறை விளக்கங்களோடு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக விளக்கினார்கள். இவ்விழாவை மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.R.தீபக் அவர்கள் விழாவுரை வழங்கி துவக்கி வைத்தார்கள்.


கிரசன்ட் பல்கலைகழகத்தின் உயிர் அறிவியல் துறையின் டீன் .S.ஹேமலதா சிறப்புரை ஆற்றினார்கள். தலைமை ஆசிரியர் திரு.கேசவன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகர் கவுன்சிலர் திருமதி ஆயிஷா சித்திகா முகமது அபுபக்கர், Dr.பரிதா பேகம் மற்றும் Dr.ரஞ்சனி இவ்விழாவினை ஏற்பாடு செய்து சிறப்பித்தார்.


மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிரசன்ட் பல்கலைகழகத்தின் உயிர் அறிவியல் துறையின் சார்பில் சிறுதானிய சத்து உருண்டை மற்றும் முளைகட்டிய பாசிப்பயறு வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad