நெல்லிக்குப்பம் அருள்மிகு ஶ்ரீவேண்டவராசி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 9 July 2023

நெல்லிக்குப்பம் அருள்மிகு ஶ்ரீவேண்டவராசி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் (எ) பார்த்தசாரதி தலைமையில் சுமார் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிராம தேவதையாக அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீவேண்டவராசி அம்மன் ஆலயம், முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் புனரமைக்க ஊர் மக்கள் முடிவு செய்யப்பட்டு ஆலயம் புணரமைக்கபட்டு புதியதாக ஆலயம், விமானமண்டபம், மஹாமண்டபம் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம் ஆகியவைகள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை விநாயகர் பூஜையும்  மாலை  முதல்கால யாக பூஜையுடன் ஹோமத்துடன் மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது நேற்றைய தினம்  இரண்டாம் கால  ஹோமம் பூஜை அடுத்ததாக மூலவர் வேண்டவராசி அம்மன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி நடைப்பெற்றது.


நேற்று மாலை மூன்றாம் காலஹோமம் யாக பூஜையும் முடிவுற்று இன்று காலை நான்காம் கால பூஜை முடிவுற்றதை தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் உள்ள கலசங்களை சிவாச்சாரியார்கள்  கோயிலை சுற்றி வலம் வந்து ஆலய விமானத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களின் ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழுங்க  மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. 


அதனைத்தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீவேண்டவராசியம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்பு பாலாபிஷேகம்  அலங்காரம் தீபாராதனைகள்  காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் .ஆறுமுகம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். குமரவேல், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டி (எ) நந்தகுமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளர் டி. தாட்சாயணி தனசேகரன் மற்றும் நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி, அம்மாபேட்டை, மேலையூர், கீழுர், தர்மாபுரி, மேல்கல்வாய், சென்னை, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad