ஏரி நீரை வெளியேற்றுவது தொடர்பாக கூடுவாஞ்சேரியில் கருத்து கேட்பு கூட்டம்.! 9பேர் பங்கேற்பு.!! - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 April 2023

ஏரி நீரை வெளியேற்றுவது தொடர்பாக கூடுவாஞ்சேரியில் கருத்து கேட்பு கூட்டம்.! 9பேர் பங்கேற்பு.!!


வண்டலூர் அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் என்ன சுமார் 40 ஏக்க சுற்றளவு உடைய கூடுவாஞ்சேரி பெரிய ஏரியை, 6கோடியே 60 லட்சம் ரூபாயில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

அடையார் ஆற்றில் வீணாக வெளியேற்றுவதால் சமூக நல ஆர்வலர்கள்,விவசாயிகள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஏறி பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது விவசாய பணிகள் நிறைவு பெற்று அறுவடை நடப்பதால் விவசாயிகளுக்கு ஏரி தண்ணர் தேவைப்படாது எனக் கூறி ஏரி நீரை வெளியேற்றும் பணிகளில் துவங்க ஒப்பந்ததாரர், மாவட்ட ஆட்சியர்க்கு அனுமதியும் கோரியிருந்தார். 

இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நேற்று கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே காலை 11மணியளவில் நடந்தது இந்த கூட்டத்தில் ஒன்பது விவசாயிகள் மட்டும் பங்கேற்றனர். உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன்,உதவி பொறியாளர் குஜராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்றனர். கூடுவாஞ்சேரி ஏரியில் உள்ள நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று தேக்கி வைத்து நீரையும் வீணடிக்காமல் பணிகளை செய்ய உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். 


அதற்கு விவசாயிகள் சம்மதம் தெரிவித்தனர். ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியையும் துவங்க தீர்மானம் 9 பேர் கொண்டு ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad