செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் கேளம்பாக்கம் ஊராட்சி சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, இந்த நிகழ்வை திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல். இதய வர்மன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வேலை உறுதி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. சி. அன்பு செழியன், நிர்வாகிகள் எஸ் எம். ஏகாம்பரம், ஒன்றிய அவைத் தலைவர் எல் ஜெயபால், ஒன்றிய துணைச் செயலாளர் எம். ராஜாராம், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒன்றிய பொருளாளர் கருணாகரன் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. பாஸ்கரன், வார்டு உறுப்பினர் விஜி, அ. உமர், கே டி கே. பழனிவேல், கிளைக் கழக செயலாளர்கள் பிரபு, அசுந்தன் சுபம் திருவானர் கண்ணன், திமுக நிர்வாகிகள் அப்துல் சுக்கூர், சிவகுமார், பாலசுப்பிரமணி, ஜெயபால், சரவணன், விக்கி, சமூக ஆர்வலர் பழனி மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment