செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்க செங்கல்பட்டு மத்திய அமமுக கட்சியினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர், மோர், ரஸ்னா, தர்பூசணி, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தாண்டவம் தீர்க்கும் பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், மண்டல பொறுப்பாளர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மா.கரிகாலன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜேவிஜி.(எ) எஸ் வி. கோபிநாத் செய்திருந்தார், இதில் செங்கல்பட்டு மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment