புதிய ரேசன்கடையை திறந்து வைத்தார் செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

புதிய ரேசன்கடையை திறந்து வைத்தார் செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர்.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கீழக்கரணை 17வது வார்டுபகுதியில் மறைமலை நகர மன்ற தலைவர் ஜெ .சண்முகம் தலைமையில் புதிய பகுதி நேர நியாய விலை கடை17 வது வார்டு உறுப்பினர் லயன் கே.ஆர். விஜயகுமார் தன் சொந்த செலவில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடைதிறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்கலந்துகொண்டு நியாயவிலை கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றிமுதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மறைமலை நகர மன்ற தலைவர் ஜெ .சண்முகம், மறைமலைநகர் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி நித்தியானந்தம்,. சரவணன், மற்றும் பொத்தேரி குட்டி (எ) யுவராஜ், காட்டூர் சத்யா, மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூர் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய  நியாய விலையை கடையை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் குத்து விளக்கு ஏத்தி திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் பி.சந்தானம்  தலைமையில் நடைப்பெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி,வார்டு உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad