ஊரப்பாக்கம் ஊராட்சியில் ₹.70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணிக்காக வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 June 2023

ஊரப்பாக்கம் ஊராட்சியில் ₹.70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணிக்காக வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.


ஊரப்பாக்கம் ஊராட்சியில் ₹.70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணிக்காக வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், ரேவதிபுரம், மதுரை மீனாட்சிபுரம், விபிகே நகர், பிரியா நகர், எம்ஜி நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்சேரி பகுதியில் உள்ள பாதாளீஸ்வரர் கோயில் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சீர்கேடாக காட்சி அளித்து வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரிமா சங்கத்தினிரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் ஒருங்கிணைந்த பன்னாட்டு அரிமா சங்கம், மோபீஸ் இந்தியா மற்றும் எக்ஸ்னோரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்படி குலத்தை தூர்வாரவும், குளக்கரை மீது நடை பாதை அமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் ₹.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதனை அடுத்து மேற்படி குலத்தை தூர்வாரும் பணிக்காக பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. 


இதில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார். தொண்டு நிறுவனங்களில் நிர்வாகிகள் சுப்பிரமணி, சீனிவாசன், பாண்டியலட்சுமி, கார்த்திக் ஆகியோர் முன்னில வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு ₹.70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணிக்காக பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 


இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சிவா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad