நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம் திறப்பு. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 June 2023

நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம் திறப்பு.


கூடுவாஞ்சேரி, நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து ₹.5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா ( எ) கஜேந்திரன் திறந்து வைத்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 


இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் ₹.5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். 


சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு ₹.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad