செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி உட்பட்ட வார்டு எண்.2, பொத்தேரி மேற்கு, பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் மழை நீர் வடிகால் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால். செடி ,கொடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை வளர்ந்து மழைநீர் வடிகால் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டதால். சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
மேலும் அதன் சுற்று பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி மற்றும் கொசுக்கள் இனப்பெருக்கம் இடமாக இருந்து வந்ததால். அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் இடமாக இருந்து வந்தது. தற்பொழுது பெய்த கோடை மழையால் மழைநீர் வடிகால் கால்வாயில் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது.
அதனால் உடனடியாக மறைமலை நகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் JCB இயந்திரம் கொண்டு மழை நீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. 2 வதுவார்டு நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பொத்தேரி தி.யுவராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment