செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா நகர தலைவர் எஸ், தனசேகரன் தலைமை வகித்தார் நகரச் செயலாளர் பிசி, லூயிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி எல், ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தனர், வரவேற்புரை நகர துணைத் தலைவர் வி. குணசுந்தரி, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு தைலாபுரம் நின்னக்கரை மறைமலைநகர் காட்டாங்குளத்தூர் அங்கு இடங்களில் கொடியேற்றி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் பிரியாணியும் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர் சுந்தரமூர்த்தி வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை இன்னும் விமர்சன விமர்சையாக பல இடங்களில் இம்மாதம் முழுவதும் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவருடைய இந்த பிறந்தநாள் விழாவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வார்டு நகர பேரூர் மாவட்டம் வாரியாக உறுப்பினர் சேர்க்கைகளை அதிகப்படுத்தி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கூறினார், நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயலாளர் இ ரஜினி ராஜா நன்றி உரை கோரி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment