செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலில் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு நடத்திய மாநில மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டமானது மிகசிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஏற்புடையதாக செய்யும். தனது சுயாட்சி, சுதந்திரம், பன்மைத்தன்மை, மனித உரிமைகள். மற்றும் மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு செயல்பாடுகள் மூலம் மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துதல் என இந்த அமைப்பு பல்வேறு விதங்களின் மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
அது மட்டம் இல்லாமல் பல என்னற்ற விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர் Dr.K.சுரேஷ் தலைமையில் இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது இந்த விழாவில் மாநில செயலாளர் Dr.K.சுரேஸ், மாநில பொருப்பாளர் Dr.R.அரவிந்த், மாநில கௌரவ தலைவர் Dr.P.சக்தி குமார், மாநில துணைத்தலைவர் அசோக், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் M.ஜனார்த்தனன் மற்றும் ஏனைய மாநில, மாவட்ட பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் மற்றும் மாநில செய்தித்தொடர்பாளர் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு G.சிங்கை.கணேஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் அறிமுக கூட்டத்தில் அமைப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகளை பற்றி கலந்துரையாடப்பட்டது.
அதில் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாடுகள் சார்ந்த விழுப்புணர்வு கொடுக்கப்பட்டு வருங்காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மேலும் ஏழை,எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment