காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி யின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறையை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்திய காயத்ரி அன்புசசெழியன் மாவட்ட குழு துணை பெருந்தலைவர், வரவேற்புரை சத்யா சேகர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றியனர் தலைமை கழக பேச்சாளர் சைதைசாதிக் திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், மேலகோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம், படூர் ஊராட்சி மன்ற தாராசுதாகர், திருப்போரூர் தொகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் கலவரத்தை கலவரத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பு ஏற்று மணிப்பூர் முதல்அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான பெண்கள் மணிப்பூர் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெண்கள் மணிப்பூர் அரசை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Reporter Anand Chengalpattu, [30-07-2023 18:14]
Photo from prabanjananand

No comments:
Post a Comment