செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கேளம்பாக்கம் இ சேவை மையத்தில் தமிழ்நாடு அரசு ஆதார் நிரந்தர பதிவு மையம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு எல்.இதயவர்மன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக திருப்போரூர் ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ், எல்.ஜெயபால் எம்.ராஜாராம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜெகன் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் விஜி, ராசாத்தி ஸ்டீபன், கே.டி.கே.பழனிவேல், கலாவதி தணிகாசலம், மற்றும் கிளை செயலாளர் அசுந்தன், ரெயின்ஷா, அப்துல் சுக்கூர், பெர்னான்டோ, பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment