அதிமுக சார்பில் சிங்கப்பெருமாள்கோவிலில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 April 2023

அதிமுக சார்பில் சிங்கப்பெருமாள்கோவிலில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில், வடக்கலை ஊராட்சி மன்ற தலைவர் மாரி மற்றும் ஷாகிர் பாஷா தலைமையில், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ராஜேந்திரன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் எம். கஜா என்கிற கஜேந்திரன், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி. ஆர். குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதில் பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, ரஸ்னா, மோர், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஆப்பூர் சிவகுமார், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஊரப்பாக்கம் மதன்குமார், கிளை செயலாளர்கள் வி. சந்தானகிருஷ்ணன், அண்ணாமலை, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad