சிங்கப்பெருமாள் கோயில் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பாக மே 1 உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 May 2023

சிங்கப்பெருமாள் கோயில் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பாக மே 1 உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர்கள் நல சங்கத்தின் சார்பாக மே 1 உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் வகையில்  தலைவர் என். உதயகுமார் மற்றும் செயலாளர் அமுல் பேட்டரி கே. சீனு(எ) சிவனேசன் ஆகியோர் தலைமையில் மகேந்திரா சிட்டி பாரேரி  பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன் கோடை வெயிலை தணிக்கும் வகையில் நீர் மோர்  வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புரட்சியாளர் ஜி. கணேஷ், எஸ். குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நிர்வாகிகள் வள்ளலார் பாண்டியன், ஏழுமலை, பஞ்சாட்சலம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad