மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்டம் சிங்கப்பெருமாள் மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய பகுதிகளில் நான்கு இடங்களில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம், பாட்டாளி ஆட்டோ தொழிற்ச்சங்க கொடி கொடி ஏற்றி அனைவருக்கும் அன்னதானமும் மற்றும் தர்பூசணி, இளநீர், வெள்ளரி பிஞ்சு, நீர் மோர் கொடுத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாமகவின் மாவட்ட செயலாளர் காயார் லோ. ஏழுமலை, கலந்து கொண்டு சிறப்பித்தார், இந்த நிகழ்ச்சியில் மறைமலைநகர் தெற்கு நகர செயலாளர் பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் கே.பி.செந்தில்நாத், ஜெ.அரிகிருஷ்ணன், நகர தலைவர் அ.தெய்வசிகாமணி, காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய பொருப்பாளர் சிங்கை சத்யா, நகர நிர்வாகிகள் சி.பாலு, மு.அப்தாகீர், ஆர்.பார்த்திபன், கு.பெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் பசுபதி, பாரேரி ரமேஷ், பழனி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் பூபதி குமார், ஜெபராஜ், பார்த்திபன், செந்தில், நரசிம்மன், சுந்தரம், கங்காதரன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment