அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ கட்டிடம் கட்ட பூமி பூஜை. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 May 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ கட்டிடம் கட்ட பூமி பூஜை.


செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (மதிப்பீடு 17இலட்சம்) சித்த மருத்துவ கட்டிடம் கட்ட இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு எல்.இதயவர்மன் Ex MLA, கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் ஆகியோர் அடிக்கல் நாட்டி  பூமி பூஜை போட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி அன்புச்செழியன், திருப்போருர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், நெல்லிக்குப்பம் கஜராஜன், கிளைச் செயலாளர்கள் தி.க.பாளையம், ஏபிஆர் அசுந்தன், து.பிரபு, ராஜா துணைத் தலைவர் கே. பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன்,  வானதி சுகு, கே.டி.கே பழனிவேல் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தகுமார், சித்த மருத்துவர் டாக்டர் கவியரசி மற்றும்  திமுக நிர்வாகிகள் திருமலை, அப்துல் சுக்கூர், பிரபாகரன், சூர்யா, ஹரிஷ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad