எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் 2023க்கான சர்வதேச சிறுதானிய மாநாடு நடைபெற்றது.! மத்திய உணவு பதப்படுத்துதல் இணைச் செயலாளர் பங்கேற்பு.!! - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Sunday, 7 May 2023

எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் 2023க்கான சர்வதேச சிறுதானிய மாநாடு நடைபெற்றது.! மத்திய உணவு பதப்படுத்துதல் இணைச் செயலாளர் பங்கேற்பு.!!

photo_2023-05-07_20-13-45

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் 2023க்கான சர்வதேச சிறுதானிய மாநாடு நடைபெறுகிறது.இந்நிகழ்வில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சக இணைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கி 2நாள் நடைபெறும் 2023 க்கான தேசிய சிறுதானிய மாநாடு தஞ்சாவூரில் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், எஸ்ஆர் எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்துகின்றன


.மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், சுயதொழில் குழுவினர்,விவசாயிகள் என சுமார் 3,000 பேர் பங்கேற்க உள்ளன. சிறுதானிய மாநாடுயொட்டி அரசு தனியார் நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 150 அரங்குகள் அடங்கிய கண்காட்சி நடைபெற்று வருகிறது.இம்மாநாடு சிறுதானியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆராய்ச்சிகள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன.


இந்தியர்கள் தொடக்கத்தில் பாரம்பரியமாக சிறுதானிய உணவு வகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர் உணவு பழக்கம் மாற்றத்தின் காரணமாக அரிசி கோதுமை உணவுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவே மக்களுக்கு சிறுதானிய உணவு வகைகளில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்லா அரசு அமைப்புகளும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.


உணவு முறைகள் மாற்றம் காரணமாக மக்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ள உணவாக சிறுதானிய உணவு அமைந்துள்ளது.மேலும் எல்லா குடும்பத்தினருக்கும் நிலைத்த உணவாக சிறுதானிய உணவு வகைகள் உள்ளன.ஆனால் அதனைப் பற்றிய பிரபலம் இல்லை,எனவே அதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை எனவும், சிறுதானியம் பயிர் விவசாயிகளுக்கு நல்ல பயனை உருவாக்கும். 

tamilaga%20kural

சிறுதானிய உற்பத்திக்கு தண்ணீர் பயன்பாடு குறைவாக இருக்கும் அதோடு தட்பவெட்ப மாற்றம் இதனை பாதிக்காது. 2நாட்கள் நடைபெறும் மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து வேளாண் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், உழவர்கள், உற்பத்தி சங்கங்கள்,சுய உதவி குழுவினர் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.


அரசு தனியார் நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட அரங்குகள் அடங்கிய கண்காட்சி காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.மேலும் கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள சிறுதானிய மற்றும் அதைச் சார்ந்த உணவு நிறுவனங்கள் பங்கேற்று உணவு வகைகளை பொதுமக்களுக்கு காட்சிபடுத்துகின்றன. இம்மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், சிறுதானியம் உணவு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பங்கேற்று சிறுதானியம் மதிப்பு கூட்ட தொழில்நுட்பம், சிறுதானியம் உணவு, உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலின் சாராஅம்சங்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டு உத்திகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்திகள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியின் முடிவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பொன்னுசாமி தகவல் தொடர்பு இயக்குனர் நந்தகுமார், உயிரி பொறியியல் துறை டீன் முனைவர் வைரமணி, எஸ்ஆர்எம் ஹோட்டல் வேளாண்மை இயக்குனர் முனைவர் அந்தோணி, அசோக் வளாக இயக்குனர் முனைவர் திருமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 150 அரங்குகள் கொண்ட சிறுதானிய கண்காட்சி பார்வையாளருக்கு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நிறைவாக தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவன துணை பேராசிரியர் முனைவர்.ஆத்மாசெல்வி நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad