இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருப்பாளர் மன்சூர் அலி முன்னிலை வகித்தார் இதனை சிங்கை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செய்திதொடர்பாளர் சிங்கை கணேஷ் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார் அமுல் சீனு வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
இக்கண்டன ஆர்பாட்டத்தில் சிங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்தியல் வேறுபாடுகளை எல்லாம் புறம்தள்ளி வைத்துவிட்டு மக்களின் நலனுகாக பங்கேற்று சிறப்பித்தனர் இதில் சமூக ஆர்வலர்கள் திருத்தேரி சண்முகம் ஜனார்த்தன, சரவணன் என ஏராளமான பொது மக்கள் பங்கேற்று கண்டன உரையும் தங்களின் எதிர்ப்பையும் கோஷங்கள் மூலமாக வெளிபடுத்தினார்கள். இறுதியில் பீரோ அன்பழகன் நன்றியுரை நிகழ்த்தினார், பாதுகாப்பு பணியில் அதிக அளவில் காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டனர். இதில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பகளை தெரிவிக்கபடும் என்று பேசுகையில் சிங்கை கணேஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment