வருகின்ற 2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் முதலமைச்சர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமர் - திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Wednesday, 24 May 2023

வருகின்ற 2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் முதலமைச்சர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமர் - திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக்.

photo_2023-05-24_13-58-08

வருகின்ற 2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் முதலமைச்சர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமர். திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக இளைஞரணி சார்பில், திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் காலனி பிரதான சாலையில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. 

இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பி.சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் ஆர்.தினேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி மற்றும் மாணவரணி துணை அமைப்பாளர்கள் சந்தோஷ்குமார், அரவிந்த், சதீஷ், வெங்கட், அவினாஷ், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜி.எம்.கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

பின்னர் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அப்போது தலைமை கழக பேச்சாளர் சைகை சாதிக் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கேஸ் சிலிண்டர் விலையை குறைப்போம். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம். கருப்பு பணத்தை மீட்டு அவரவர் வங்கி கணக்குகளில் ₹.15 லட்சம் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார். தற்போது அவர் ஹிட்லர் போன்று ஆட்சி நடத்தி வருகிறார். ஹிட்லர் ஆட்சிக்கு முடிவு கட்டியது ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின். இந்திய அரசாங்கத்தில் மோடிக்கு முடிவு கட்டப்போவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், வருகிற 2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் பாரத பிரதமர் ஆவார் என்றார். 


மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நகரக் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், நகர மன்ற வார்டு கவுன்சிலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad