அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு நந்திவரம் கூடுவாஞ்சேரி சிவன் கோவில் பூஜை செய்த அதிமுகவினர். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Tuesday, 16 May 2023

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு நந்திவரம் கூடுவாஞ்சேரி சிவன் கோவில் பூஜை செய்த அதிமுகவினர்.

photo_2023-05-16_16-38-48

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர அதிமுக இளைஞர் அணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு வழக்கறிஞர் கேசவன் தலைமையில் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை வேதங்கள் முருங்க அபிஷேகம் நடைபெற்றது. 

tamilaga%20kural

இதில் எடப்பாடி கே. பழனிசாமி நீடூடி வாழ வேண்டும் என்று கோஷங்கள் இட்டு கோயிலை சுற்றி வந்தனர், கோவிலில் மேலும் அனைத்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி மின் வாரியம் அலுவலகம் அருகே சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி அதிமுக வார்டு உறுப்பினர்கள் நகர நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் கலைச்செல்வன், தேவி தனசேகரன், கண்ணன், முன்னாள் கவுன்சிலர் சரவணன், நிர்வாகி கோதண்டன், அப்பு(எ) வெங்கடேசன் பார்க்கவி வெங்கடேசன், விஜயகுமார், ஸ்ரீரங்கபாணி, நடராஜன், மாணிக்கம், தேவராஜ், கன்னியப்பன், மாரியப்பன் சூர்யா மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்/

No comments:

Post a Comment

Post Top Ad