செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் அவர்களது தலைமையில் நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள சாவடிக்குளம் மற்றும் அங்கன்வாடி பகுதிகளை சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டு நடைப்பயணம் செல்லப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் செயலர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, சசிகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, ஓவர்சீஸ் விஜய்ஆனந்த், செல்லப்பன், குப்புசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், அ.உமர், கே.டி.கே.பழனிவேல், கலாவதி தணிகாசலம், ஜெயசித்ரா ஜாப்ரின், சித்ரா கோவிந்தராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் வருகை தந்தவர்களுக்கு தொப்பி மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தூய்மை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment