இதில் வண்டலூர் குறு வட்டத்தில் மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம்,ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், ஊனைமாஞ்சேரி கொளப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், கீரப்பாக்கம், முருகமங்கலம் ஆகிய கிராமங்களும், கூடுவாஞ்சேரி வட்டத்தில் கூடுவாஞ்சேரி, நந்திவரம், காரணைப்புதுச்சேரி, அருங்கால், கன்னிவாக்கம், பாண்டூர், குமிழி, பெருமாட்டுநல்லூர், கல்வாய், அஸ்தினாபுரம் ஒத்திவாக்கம் பனங்காட்டுப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்துவது வழக்கம். இந்நிலையில், 1432 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி எஸ்.ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.
இதில் பட்டா, சிட்டா, அடங்கல், பெயர் மாற்றம், திருத்தம், கிராம நத்தம் பட்டா, உட்பிரிவு, சர்வே, முதியோர், விதவை பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை நெடுங்குன்றம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் உட்பட பொதுமக்கள் 99 பேர் மனுவாக கொடுத்தனர். இதில் அனைத்து மனுக்களும் பரிசீலனையில் உள்ளன.
No comments:
Post a Comment