செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 280 என தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் மற்றும் துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment