திருப்போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை விளக்க கூட்டம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 May 2023

திருப்போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை விளக்க கூட்டம்.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மற்றும் தளபதி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சிக்கு திமுகவின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் க.கௌரிசங்கர் தலைமை தாங்கினார், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.ஜெகதீப்  வரவேற்புரையாற்றினார், ஒன்றிய இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ராஜாசோழன், செ.நாகரத்தினம், எம்.ருக்மாங்கதன், மோ.குணா, நா.கோபு, எஸ்.வடிவேலன் , க.அசேன்அலி, டி.பிரிவின்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ம.ஜெகன்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர், சிறப்புரையாற்றிய வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், தலைமை செயலாளர் சேலம் சுஜாதா தலைமை வகித்தார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்புசொழியன், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் செயலாளர் தேவராஜ்,  மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆர்.கோவிந்து, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீ.விஜயகுமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், ஜெ.கே.சம்பத், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபால், ஏ.ரமேஷ், எம்.ராஜாராம், எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிரிதிநிதி என்.ஜி.கெஜராஜன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சந்தியாவெங்கடேசன், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் செ.எல்லப்பன், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad