தாம்பரம் சண்முகம் சாலையில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 May 2023

தாம்பரம் சண்முகம் சாலையில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் தலைமையில் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் ப.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட துனைச் செயலாளருமான ப.தன்சிங், தாம்பரம் மேற்கு பகுதி செயலார் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் பேசுகையில் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், கள்ள சாரயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர் எனவும் கள்ள சாரயத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், திமுக ஆட்சியில் ஊழல்கள் பெருகிவிட்டதாக தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பேசுகையில் திமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி எனவும் மக்களை வஞ்சிக்கும் அரசாகவே உள்ளது என தெரிவித்தார். இதில் முன்னாள் நகரமனற தலைவர்கள், துனைத் தலைவர்கள், துனைத் தலைவர்கள்,மாநகர, நகர, பேரூர் மற்றும் மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத், காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் எம். கஜா (எ) கஜேந்திரன் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி ஆர். குணசேகரன், நகர பி. பாளையம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம் ஜி கே. கோபி கண்ணன், நகர அம்மா பேரவை செயலாளர் நகர எட்டாவது வார்டு செயலாளர் ஆர். தசரதன் (எக்ஸ்எம்சி) மறைமலை நகர மன்ற உறுப்பினர் கஸ்தூரி தசரதன், பொத்தேரி நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ், ஆறாவது வார்டு வட்டச் செயலாளர் ஜெயக்குமார், பன்னிரண்டாவது வார்டு செயலாளர் தமிழரசு, துணைச் செயலாளர் செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி, கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன், ஊராட்சி நிர்வாகிகள் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad