புதிய நியாய விலை கட்டிடம், ஓஎம்ஆர் சாலையில் பேருந்து நிழற்குடை ஆகியவை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Friday, 5 May 2023

புதிய நியாய விலை கட்டிடம், ஓஎம்ஆர் சாலையில் பேருந்து நிழற்குடை ஆகியவை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

photo_2023-05-05_22-43-52

செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 11.16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டவும்,  ஓஎம்ஆர் சாலையில் பேருந்து நிழற்குடை ( மதிப்பீடு 6 லட்சம் ) அமைக்கவும் இன்று பூமி பூஜை போடப்பட்டது.

tamilaga%20kural

சிறப்பு விருந்தினராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர் திருமதி திவ்யா வினோத் கண்ணன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள்,  விசிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad