கூடுவாஞ்சேரி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் வன்னியர் குல ஷத்திரிய மரபினர்களால் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றன. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 May 2023

கூடுவாஞ்சேரி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் வன்னியர் குல ஷத்திரிய மரபினர்களால் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றன.


கூடுவாஞ்சேரி, அருள்மிகு பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா வன்னியர் குல ஷத்திரிய மரபினர்களால் கோலாகலமாக நடைபெற்றன.ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவானது 10ஆம் நாள் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரியில்  அருள்மிகு  பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா  கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு 11நாள் திருவிழாவாக தினமும் நடைபெற்று வருகிறது, அந்த வரிசையில் நேற்று 10ஆம் நாள் விழாவான,வன்னியர் குல ஷத்திரிய மரபினர்கள் சார்பில்   ஜி.எஸ்.டி. சாலை வழியாக ஊர்வலமாக புறப்பட்டு  அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.


ஊர்வலத்தில் கரகாட்டம், நாதஸ்வர மேள தாள வாத்தியங்களுடன் ஏராளமான பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். இதனால் ஜி.எஸ்.டி, சாலையில் கடும் வாகன நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படுகளம் தீமிதி உற்சவம் சிறப்பான முறையில்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாண வேடிக்கையுடன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட இரு ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இத்திருவிழாவில் சுத்துபட்டு கிராமமான ஊரப்பாக்கம், தயலாவரம், காயிரம் பேடு மற்றும் பெருமாட்டுநல்லூர் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad