நின்னக்கரை கிராமத்தில் பழமையான ஆலயம் ஸ்ரீ அருள்மிகு பொன்னியம்மன் ஆலயம்உள்ளது சுமார்400-ம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர் இந்தக் கோயில் அருள் பலிக்கும் பொன்னியம்மன் பக்தர்கள் மனதில் வேண்டுவதை உடனே அதை நிறைவேற்றி தருவதாக ஒரு ஐதீகமாக உள்ளது எனகூறப்படுகிறது ஆகையால் இந்த கோயிலில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தக் கோயிலில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்த்திருவிழா நடப்பது வழக்கமாக உள்ளது இந்த ஆண்டு தேர்திருவிழா மறைமலைநகர் மாமன்ற உறுப்பினர் அரங்ககிரிசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தவிழாவில் விஜயகுமார், நாட்டாமைடில்லி, ஜீவானந்தன், திமுக வட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment