ஊனைமாஞ்சேரி பிரதான சாலையை அமைக்க ₹.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 June 2023

ஊனைமாஞ்சேரி பிரதான சாலையை அமைக்க ₹.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன்.


ஊனைமாஞ்சேரி பிரதான சாலையை அமைக்க ₹.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன்  அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், ஊனைமாஞ்சேரி, வசந்தாபுரம், சந்திராபுரம், சக்கரவர்த்தி நகர், ஏழுமலை அவன்யூ, சுசில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், வண்டலூர்-கேளம்பாக்கம் செல்லும் சாலையில் இணையும் 2 கிலோ மீட்டர் கொண்ட ஊனைமாஞ்சேரி- கொளப்பாக்கம் பிரதான சாலை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த சாலை கடந்த 2011- 2016-ம் ஆண்டில் ₹.38 லட்சம் செலவில் 30 அடி அகலத்தில் தார் சாலையாக அமைக்கப்பட்டன. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் மேற்படி சாலையை இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 30 அடி அகலத்தில் இருந்த மேற்படி பிரதான சாலையின் இரண்டு பக்கத்திலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 


இதில் ஆகிரமிப்பு பிடியில் சிக்கி உள்ள மேற்படி பிரதான சாலை தற்போது 20 அடி சாலையாக குறுகியுள்ளன. மேலும் மேற்படி சாலை தற்போது குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும், தற்போது வெளுத்து வாங்கும் வெயில் காலத்தில் புழுதி நிறைந்த சாலையாகவும் அலங்கோல நிலையில் காட்சியளித்து வருகிறது. இந்த சாலையில் சென்னை, உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு மாநகர பேருந்தும், தாம்பரத்தில் இருந்து ஒரு மாநகர பேருந்தும் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலையின் சீர்கேட்டினால் மேற்படி பேருந்துகள் சரிவர இயங்குவதில்லை. 


இதனால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று படித்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர், வெளியூர்களுக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு மேற்படி பிரதான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


அதன் எதிரொலியாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹.2 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மேற்படி சாலையை அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக அவை தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஜேவிஎஸ் ரங்கநாதன், பாமக ஊராட்சி மன்ற தலைவர் எம்.சி.மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர் தனசேகரன், ஊராட்சி செயலர் டில்லி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், கொளப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் KSN.நேதாஜி, ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு கொளப்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி செல்லும் பிரதான சாலையை அமைக்க பூமி பூஜை போட்டு அடிகள் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். 


அப்போது ஊளைமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி அருகே சுடுகாடு உள்ளது. இதன் எதிரே இந்திரா குடியிருப்பு பகுதியில் 160 இருளர் குடும்பத்தினர் கடந்த 300 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜேவிஎஸ் ரங்கநாதன் எம்எல்ஏவிடம் மனு கொடுத்து வலியுறுத்தினார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ உறுதி அளித்தார். 


இதில் நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன், கல்வாய் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தயாளன், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad