செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் பிளாமா கேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 60 பெண்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில்பிளாமாகேஸ் நிறுவனம் அவர்களை திடீரென பணியைவிட்டு நீக்கியதாக கூறப்படுகிறது, இதனை அறிந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள்பிளாமாகேஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இது குறித்து அவர்கள் கூறியது, கடந்த 8 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்தோம் தற்போது தீடீரென உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம் என தெரிவித்தனர், காரணம் கேட்டால் பதிலளிக்காமல் காவல்துறை உதவியுடன் எங்களை கலைந்து செல்ல கூறுகிறார்கள் என கூறினர்.


No comments:
Post a Comment