கூடுவாஞ்சேரியில் செயல்பட்டுவரும் பாண்டியன் கராத்தே அகடாமியின் சார்பில் மாணவர்கள் 18 தங்கப்பதக்கம் 20 வெள்ளிபதக்கம் வெற்றி பெற்றார்கள, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகடாமியின் காப்பாளர் மல்லை சி.இ.சத்யா கலந்து கொண்டு வாழ்த்தினார். அவர்களுக்கு பாராட்டு விழா கூடுவாஞ்சேரியில் நிறுவனர் கராத்தே பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜிகே. லோகநாதன் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் கஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள். நிகழ்வில் அகடாமியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கே. ஹைதர் அலி ஆலோசகர்கள் ராஜாஎபிநேசர் பெர்னான்டஸ் பாபு. தலைமை பயிற்ச்சியாளர்கள் சிவபாலன் பத்ருதின் மோனிஷா பிரபாகரன் அமுதா பாண்டியன் ஷர்புதீன் மித்தேஷ் சுதர்சன் பிரியதர்ஷினி அப்சல் ஜெபா மற்றும் பலர் கலந்து கொண்டனர் நன்றியுரை கும்பூ பாண்டியன் அவர்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment