ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலமாக சென்று பின்னர் படூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வினை படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவர் கே.ஏ.எஸ்.சுதாகர், படூர் ஊராட்சி மன்றத்தலைவர் கே.ஏ.எஸ்.தாராசுதாககர் ஆகியோர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்து நிகழ்வை துவங்கி வைத்தனர்கள். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், சமத்துவ சரவணன், படூர் பசுமை செங்கை ஆனந்தன், கோகுல் துப்பாக்கிமணி, நவீண் மற்றும் ஊராட்சி மன்ற ஊழியர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment