உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நந்திவரம்கூடுவாஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்த நகராட்சி நிர்வாகம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Tuesday, 6 June 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நந்திவரம்கூடுவாஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்த நகராட்சி நிர்வாகம்.

photo_2023-06-06_13-33-44

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் மற்றும் மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பொதுமக்கள் அனைவரும் மரம் நடுவதை தொடர்ச்சியான சமூக சேவையாக ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி. கார்த்திக் நகர் மன்ற துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் நகராட்சி ஆணையர் இளம் பருதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி .கார்த்திக் கூறுகையில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் பகுதி முழுவதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு இடங்கள் மற்றும் தங்களது வீடுகளில் மரங்களை நட்டு வளர்ப்பதினால் நந்திவரும் கூடுவாஞ்சேரி நகர் பகுதிக்கு தேவையான சுத்தமான காற்று குடிநீர் உள்ளிட்ட தேவைகளை தன்னிரைவு செய்து கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற மரங்களை நட்டு வளர்த்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad