இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்து 33,000 மதிப்பீட்டில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டனர்.
பின்னர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக 15-வது நிதி திட்டத்தின் கீழ் ₹.80 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் 12 வாகனங்களை பொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, திமுக தலைமை பொது குழு உறுப்பினர் ஜிதேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீமதிராஜி, டில்லீஸ்வரிஹரி, சதீஷ்குமார், ரவி, டில்லி, தோப்பு கார்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment