நெடுங்குன்றம் ஊராட்சியில் ₹.14 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை; மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 July 2023

நெடுங்குன்றம் ஊராட்சியில் ₹.14 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை; மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.


நெடுங்குன்றம் ஊராட்சியில் ₹.14 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணா நகர், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட  12வது வார்டு, கொளப்பாக்கம், நாராயணன் நகர், ஜாஸ்மின் தெருவில் உள்ள பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குறையுமாக காட்சியளித்து வந்தது. இதனை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கவுன்சிலரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். அதன் பேரில் மாவட்ட கவுன்சிலரின் பொது நிதியிலிருந்து ₹.14 நிதி ஒதுக்கப்பட்டு ஜாஸ்மின் தெருவில் உள்ள பிரதான சாலை பேவர் பிளாக் சாலையாக அமைக்கப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. 


இதில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா (எ) கஜேந்திரன் கலந்துகொண்டு 14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad