தாம்பரம் சண்முகம் சாலையில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 July 2023

தாம்பரம் சண்முகம் சாலையில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


சென்னை அடுத்த தாம்பரம்  சண்முகம் சாலையில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூரில் கிறுஸ்துவ குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலை கண்டித்து  மணிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொது செயலாளர் தலைமையில் கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க  தலைவரும், திருச்சி கிழக்கு  சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா முன்னிலையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மாநில துனை பொதுசெயலாளர் யாக்கூப் பேசுகையில் 76 நாட்கள் ஒரு மாநிலத்தில் கலவரம் நடந்து கொண்டு இருக்கிறது, கிறிஸ்துவ மக்களிடம் வன்கொடுமை செய்து கொண்டு இருக்கின்றனர், தேவாலயங்கள் எரிக்கபடுகின்றனர், இதை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும், எங்கள் வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ். இல்லாதவர்களை உருவாக்குவார்கள் எனவும், தமிழக முதலமைச்சருக்கு  பின்புலமாக இருப்போம் என தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் பேசுகையில் மணிப்பூரில் நடந்துள்ள 3 பெண்களுக்கு கூட்டு பலாத்காரம் செய்தது மெய்தின மக்கள், மேலும் மணிப்பூரில் வீடுகளை கொள்ளையடித்து அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது எனவும் இரானுவ வீரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மணிப்பூரில் மணித இனம் வெட்கி தலைகுனிந்து கொண்டு இருக்கிறது என பல குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார். 


ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் மா.வை மகேந்திரன், சி.பி.ஐ.எம் மாவட்ட செயலாளர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், திராவிட கழக மாவட்ட தலைவர் முத்தையன், மணிதநேய மக்கள் கட்சி கூட்டணி நிர்வாகிகள், கிறிஸ்துவ மதநல்லிணக்க நிர்வாகிகள், போதகர்கள் மற்றும் கிறிஸ்துவ, முஸ்லீம் சகோதர, சகோதிரிகள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad