நெடுங்குன்றம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வாசலை திறந்து வைத்து அனைவருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட திமுக எம்எல்ஏ. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

Post Top Ad

Sunday, 9 July 2023

நெடுங்குன்றம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வாசலை திறந்து வைத்து அனைவருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட திமுக எம்எல்ஏ.

photo_2023-07-09_21-11-22

கூடுவாஞ்சேரி,  நெடுங்குன்றம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வாசலை திறந்து வைத்து அனைவருடன் அமர்ந்து திமுக எம்எல்ஏ பிரியாணி சாப்பிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் இருந்து நெடுங்குன்றம் செல்லும் சாலையோரத்தில் நெடுங்குன்றம் ஊராட்சி உட்பட்ட அண்ணா நகர் பெரிய ஏரி உள்ளது. 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

இந்த ஏரிக்கரை ஓரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமை வாய்ந்த ஜும்ஆ பள்ளி வாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி வாசல் தலைவர் நசஜீர்அகமது தலைமை தாங்கினார். செயலாளர் முகைதீன் பிச்சை, பொருளாளர் நௌரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர்அலி, செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட பள்ளி வாசலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 


பின்னர் அனைவருடன் அமர்ந்து வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ பிரியாணி சாப்பிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதாஸ்ரீசீனிவாசன், ஊனைமாஞ்சேரி மகேந்திரன், கொளப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கே எஸ் என்.நேதாஜி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ராஜன்ஆறுமுகம், கூடுவாஞ்சேரி நகர துணை தலைவர்  எஸ்.சாஜீதீன்உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad