நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மாணவர் அணி இணைந்து பல்லுயிர்க் காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 November 2023

நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மாணவர் அணி இணைந்து பல்லுயிர்க் காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி.


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை கூடுவாஞ்சேரி சிக்னல் அருகில் 11 மணி அளவில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ஆலோசனைப்படி, இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் டாக்டர் இளையவேந்தர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்லுயிர்க் காப்போம் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயிர் காக்கும் வகையில் விலையில்லா தலைக்கவசம் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் டாக்டர் இளையவேந்தர் சுமார் 500 வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஐடி விங் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் ஏபிஜே. ரமேஷ் வரவேற்பு அளித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன்,மாநில பொருளாளர் வழக்கறிஞர் ஜி. ராஜன், மாநில முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைச் செயலாளர் ஏ.கே.டி. வரதராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் ஆர்.அமுதா ராஜேஷ்வரன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் எஸ். முத்தமிழ்செல்வன், ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் எல். நாராயணன், மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் இ. இராகுல் குமார், நன்றியுரை அழைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad